சுற்றுலா துறையில் வீழ்ச்சி!





வளைகுடா யுத்தங்காரணமாக இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, 2026 மார்ச் மாதத்தில் நாட்டிற்கு 183,979 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 19 சத வீத வீழ்ச்சியாக கருதப்படுகின்றது.

சமீபத்திய தரவுகளின்படி, நாட்டிற்கு மார்ச் மாதத்தில் 47,533 (26 வீதம்) சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

மேலும், மார்ச் மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 18,092 பயணிகள், ரஸ்யாவிலிருந்து 15,685 பயணிகள், ஜெர்மனியிலிருந்து 13,429 பயணிகள், சீனாவிலிருந்து 14,064 பயணிகள் மற்றும் பிரான்சிலிருந்து 8,359 பயணிகளும்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, 2026 ஜனவரி 01 முதல் மார்ச் 31 வரையிலான மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 740,634 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வளைகுடா யுத்தங்காரணமாக புலம்பெயர் தமிழ் மக்களது வருகையும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments