புதன் விடுமுறை இல்லை!
எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் புதன்கிழமைகளில் அமுல்படுத்தப்பட்ட விசேட விடுமுறை இனி இல்லையென அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
பிரதி புதன்கிழமைகளில் வழங்கப்படும் விசேட அரச விடுமுறையானது எதிர்வரும் 8ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிச் சேவை துறைகளுக்காக விசேட விடுமுறை வழங்கப்பட்டு வந்திருந்தது.
புதிய அறிவிப்பின் படி, எதிர்வரும் புதன்கிழமை முதல் அனைத்து அரச நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் வழமை போன்று இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment