பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படும் என டிரம்ப் அச்சுறுத்தல்


பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படும் என  டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரானைத் தாக்குவதற்காக அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஆயுதங்களால் நிரப்பப்பட்டு வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 நாங்கள் எல்லாவற்றையும் புதிதாகத் தொடங்கியுள்ளோம். கப்பல்களில் மிகச் சிறந்த வெடிமருந்துகளையும், இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகச் சிறந்த ஆயுதங்களையும் ஏற்றுகிறோம். முன்பு நாங்கள் பயன்படுத்தியதை விடவும் சிறந்தவை அவை, மேலும் நாங்கள் அவற்றைத் தகர்த்தறிந்தோம் என்று அவர் நியூயார்க் போஸ்ட் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்.

மேலும், நமக்கு ஒரு ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், நாம் அவற்றைப் பயன்படுத்துவோம், மிகவும் திறம்படப் பயன்படுத்துவோம் என்று கூறினார். 

No comments