யாழ்.நகர் பகுதிகளில் 48 மணிநேரத்தில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது
யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்ட 48 மணி நேர சிறப்பு நடவடிக்கையில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதை ஒழிப்பு நடவடிக்கையாக பொலிஸார் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் விசேட நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் வீதி சோதனை நடவடிக்கை, போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் ,போதைப்பொருளை அடிமையானவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலான சோதனை நடவடிக்கைகள் போன்றவற்றை முன்னெடுத்த வேளை , போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து , ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

Post a Comment