ஈரானில் அமெரிக்காவின் போர் நோக்கங்கள் மாறவில்லை - ஹெக்ஸெத்
ஈரான் குறித்த அமெரிக்காவின் நோக்கங்கள் மாறாமல் உள்ளன என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்ஸெத் ஆக்ரோஷமான தொனியில் கூறினார்.
எபிக் ஃபியூரி வித்தியாசமானது. அது மிகத் துல்லியமான கவனத்தைக் கொண்டது.தீர்க்கமானது. அமெரிக்காவுக்கே முதலிடம் என்ற கொள்கையைக் கொண்ட எங்கள் ஜனாதிபதியால் நேரடியாக வழங்கப்பட்ட எங்கள் நோக்கங்கள், முதல் நாளில் எப்படி இருந்தனவோ அப்படியே இருக்கின்றன என்று பென்டகனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
ஈரான் மீண்டும் கட்டியெழுப்ப முடியாதபடி ஏவுகணைகள், ஏவுதளங்கள் மற்றும் அதன் தொழில்துறை தளத்தை அழிப்பது, அதன் கடற்படையை அழிப்பது, மற்றும் ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறாமல் இருப்பதை உறுதி செய்வது ஆகியவை வாஷிங்டனின் நோக்கங்களில் அடங்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஈரான் பல தசாப்தங்களாகத் தனது அரசு வளங்களைத் தன் மக்களுக்கு வழங்காமல், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் புதைக்கப்பட்ட தளங்களில் முதலீடு செய்துள்ளது. ஆனால், உலகின் வேறு எந்த இராணுவமும் செய்ய முடியாத அளவிற்கு நாங்கள் அவர்களை வேட்டையாடி வருகிறோம். அதன் முடிவுகளே கண்கூடாகத் தெரிகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

Post a Comment