போர் தொடங்கியதிலிருந்து 6,000க்கும் மேற்பட்டோர் காயம் - இஸ்ரேல் அறிவிப்பு
ஈரான் மீதான போர் தொடங்கியதிலிருந்து 261 வீரர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான போர் தொடங்கியதிலிருந்து 261 வீரர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
படைவீரர்களிடையே ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையை அது வெளியிடவில்லை.
இதேநேரம் போர் தொடங்கியதிலிருந்து 6,000க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான போர் தொடங்கியதிலிருந்து, 6,008 பேர் காயமடைந்து மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 121 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும் இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 232 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment