விமானங்கள் திரும்புகின்றன!

 


மத்திய கிழக்கில் இடம்பெற்ற வெவ்வேறான தாக்குதல்களில் காயமடைந்த நான்கு இலங்கையர்களும் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

காயமடைந்த நான்கு இலங்கையர்களில் மூவர் தற்போது பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்;.

நான்காவது நபரும் பாதுகாப்பாக வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதையும் இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இதனிடையே மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வந்த போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தனது வழக்கமான விமான சேவைகளை, ரியாத் மற்றும் டுபாய் ஆகிய நகரங்களுக்கு மீண்டும் நாளாந்தம் முன்னெடுக்கவுள்ளதாக சிறீலங்கன் ஏர்லைன்ஸ்  நிறுவனம் அறிவித்துள்ளது.

பிராந்தியத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்த பின்னரே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் விமான பயணங்கள் சவூதி அரேபியாவிற்கு இன்று திங்கட்கிழமை முதல்; நாளாந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பமாகின்றன.

அதேபோன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கான பயணங்கள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் நாளாந்த விமான சேவைகள் வழமை போல் இயக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments