ஈரானில் இருந்து வந்த 2வது ஏவகணையைத் தடுத்தது துருக்கி!
ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை அதன் வான்வெளியில் நுழைந்தபோது இடைமறிக்கப்பட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து, அதன்
எல்லைக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக துருக்கியேவின் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.நல்ல அண்டை நாடுகளுடனான உறவுகள் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு துருக்கி மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், நமது நாட்டின் பிரதேசம் மற்றும் வான்வெளியை நோக்கி செலுத்தப்படும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராக தீர்க்கமாகவும் தயக்கமின்றியும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
இந்த விடயத்தில் துருக்கியேவின் எச்சரிக்கைகளுக்கு செவிசாய்ப்பது அனைவரின் நலனுக்கும் உகந்தது என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Post a Comment