துப்பாக்கிதாரி பிடிபட்டார்: இவது கலிபோனியாவைச் சேர்ந்தவர் - டிரம்ப்


துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பிடிபட்டதாகவும், அவர் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் என நம்பப்படுவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இரகசிய சேவைப் பிரிவினரால் தடுத்து நிறுத்தப்படுவதற்கு முன்பு, சந்தேக நபர் பல ஆயுதங்களைக் கொண்டிருந்ததாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார்.ஒரு அதிகாரி சுடப்பட்டார், ஆனால் அவர் குண்டு துளைக்காத கவச உடையால் பாதுகாக்கப்பட்டார்.

மிகவும் சக்திவாய்ந்த துப்பாக்கியால் அவர் மிக அருகிலிருந்து சுடப்பட்டார் ஆனால் அந்த கவச உடை தன் வேலையைச் சரியாகச் செய்தது என்று டிரம்ப் கூறினார்.

சனிக்கிழமை இரவு, வெள்ளை மாளிகையின் விருந்தினர் மண்டபத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை செய்தியாளர்களுக்கான வருடாந்திர இரவு விருந்திலிருந்து டிரம்ப் மற்றும் பிற அமெரிக்க உயர்மட்டத் தலைவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

No comments