இது அமெரிக்காவின் போர்:என்கிறார் ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி


இப்பகுதியில் பரவிவரும் போருக்கு அமெரிக்காவே காரணம் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களைக் குறிவைத்ததை மறுத்த அவர், ஈரானின் பதிலடியை நியாயப்படுத்துவதோடு, வளைகுடா முழுவதும் அமெரிக்க இராணுவத்தின் பிரசன்னம் பதற்றம் அதிகரிப்பதை தவிர்க்க முடியாததாக ஆக்குகிறது என்றும் எச்சரிக்கிறார்.

போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவாகப் போர் நிறுத்தத்தை நிராகரித்த அதேவேளையில், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்திற்கான சாத்தியமான புதிய விதிகள் குறித்தும் அராக்சி சூசகமாகத் தெரிவித்தார்.

No comments