ஈரானிய மின் நிலையங்கள் மீதான தாக்குதல்கள் 5 நாட்களுக்கு ஒத்திவைத்தார் டிரம்ப்
ஈரான் தனது எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது பெரும் தாக்குதல்களை எதிர்கொள்ளாமல் ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும் என விடுத்திருந்த 48 மணி நேரக் கெடுவிலிருந்து பின்வாங்குவதாக அறிவித்தார். இந்த காலக்கெடு திங்கள்கிழமை பிற்பகுதியில் முடிவடைய இருந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று திங்கள்கிழமை காலை 'ட்ரூத் சோஷியல்' இணையதளத்தில் பதிவிவிட்டார்.
ஈரானுடனான மிகவும் நல்ல மற்றும் ஆக்கப்பூர்வமான உரையாடல்களே இந்த இடைநிறுத்தத்திற்கான காரணம் என டிரம்ப் குறிப்பிட்டார். ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு இராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக அமெரிக்கத் தலைவர் கூறினார்.
இந்த வாரம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளின் வெற்றியைப் பொறுத்தே இந்த இடைநிறுத்தம் நீடிக்கும் என்ற நிபந்தனையையும் டிரம்ப் சேர்த்துக் கூறினார்.
டிரம்ப் தாம் குறிப்பிட்ட பேச்சுவார்த்தைகள் குறித்து எந்தத் தகவலையும் அளிக்கவில்லை அதுபோலவே, அத்தகைய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதை ஈரானும் ஒப்புக்கொள்ளவில்லை என்பது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

Post a Comment