ஈரான் போர்: கூட்டாளிகளைப் பாதுகாக்க பிரான்ஸ் தயாராக உள்ளது
தனது கூட்டாளிகள் ஆதரவைக் கோரினால் அவர்களைப் பாதுகாக்க பிரான்ஸ் தயாராக உள்ளது என்றும், தலையிடும் உரிமையை அது கொண்டுள்ளது என்றும் பிரஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் கூறுகிறார்.
பிரெஞ்சு ஒளிபரப்பாளரான BFM TVக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மோதல்கள் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளை மோதலுக்குள் இழுத்துச் செல்கிறது. அதனுடன் எங்களுக்கு உறவுகள், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நலன்கள் உள்ளன. அவற்றில் இராணுவ தளங்கள் அடங்கும் என்று கூறினார்.
பிராந்தியத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளில் சுமார் 400,000 பிரெஞ்சு நாட்டினர் இருப்பதாகவும், வணிக மற்றும் இராணுவ விமானங்கள் மூலம் அதிக ஆபத்தில் உள்ளவர்களை திருப்பி அனுப்ப பிரான்ஸ் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Post a Comment