கதை கதையாம்:காணி விடுவிப்பாம்!
சட்டவிரோத விகாரை அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரை காணிகளை விடுவிப்பதாக உறுதி தெரிவித்திருந்த நிலையில் தற்போது மயிலிட்டியில் பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள பொது மக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என அமைச்சர் இராமலிங்கம் - சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மயிலிட்டி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக கடற்றொழில் அமைச்சர் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்திருந்தார்.
இந்நிலையில் அங்கு மக்களோடு உரையாடிய போது பாதுகாப்பு தரப்பிடம் உள்ள காணிகள் இவ்வருட இறுதிக்குள் விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதேவேளை பலாலியில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தை கிளிநொச்சிக்கு நகர்த்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக ராஜபக்ச தரப்பு அனுர அரசின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகின்றது.
எனினும் அதனை அரசு மறுதலித்து வருகின்ற நிலையில் தையிட்டி திஸ்ஸ விகாரை காணியில் ஒரு அங்குலத்தினை தானும் விடுவிக்க தயாராகவில்லையென விகாராதிபதி மறுதலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment