இந்திய டீசல் : இந்தியக் கொடிக்கு அனுமதியாம்!
இலங்கை, பங்களாதேஸ் மற்றும் மாலைதீவு உள்ளிட்ட அண்டை நாடுகளின் டீசல் விநியோக கோரிக்கைகளை இந்தியா பரிசீலித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் முக்கிய ஏற்றுமதியாளராக உள்ளது, குறிப்பாக அதன் அண்டை நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது .ஏற்கனவே பங்களாதேஸ்; டீசல் விநியோகத்தைக் கோரியுள்ளதாகவும், கூறப்படுகின்றது.
இதனிடையே இந்தியக் கொடியுடன் எரிபொருள் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு ஹர்முஸ் நீரிணை ஊடாக பயணிப்பதற்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச செய்தி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகமும், டில்லியில் உள்ள ஈரானிய தூதரகமும் விடயம் தொடர்பில் மௌனம் காத்துவருகின்றன.
ஏற்கனவே மேற்கு இந்தியாவில் உள்ள காண்ட்லா துறைமுகத்திற்குச் சென்ற தாய்லாந்து கப்பல் நேற்று புதன்கிழமை ஹர்முஸ் நீரிணைப் பகுதியில் தாக்கப்பட்டது.தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டம் தெரிவித்திருந்தது.
இந்நிலையிலேயே இந்தியக் கொடியுடன் எரிபொருள் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment