ஜனாதிபதி செயலகத்தின் வீட்டுப் பணிப்பெண்களிற்கும் வீடு!
கொழும்பு புளூமெண்டல் வத்தை பகுதியில் வறிய மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட சிரிசந்த வீடமைப்புத் திட்டத்தின் 22 வீடுகள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் துணைவி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரின் அரசியல் நெருக்கமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
சுமார் 39 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்த வீடுகள், உரிய தகுதியற்றவர்களான ஷிரந்தி ராஜபக்ஷவின் அழகுக்கலை நிபுணர்கள், ஜனாதிபதி செயலகத்தின் வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் முன்னாள் சட்டமா அதிபர் ஒருவரின் வீட்டுப் பணியாளர் ஆகியோருக்கு சட்டவிரோதமாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இந்தத் திட்டத்தின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ரஞ்சித் சமரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment