சுற்றுலாப்பபயணிகள் கைது!
வெலிகமா பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து பொருட்கள் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சுற்றுலா கணவன்-மனைவி ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 36 வயதான கணவர் மற்றும் 35 வயதான மனைவி ஆவர்.
வாடிக்கையாளர்களாக கடைக்குள் வந்த அவர்கள், பற்பசை, வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல பொருட்களை வாங்குவது போல நடித்து, தங்களது தனிப்பட்ட பைகளில் மறைத்து வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொதுவாக உள்ளூர் வாடிக்கையாளர்கள் தங்களது பைகளை வெளியே ஒப்படைத்து விட்டு கடைக்குள் செல்ல வேண்டிய விதிமுறை இருந்தாலும்,
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மரியாதையாக, அவர்கள் தங்களது பைகளை கடைக்குள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

Post a Comment