யேர்மனியில் வங்கிக் கொள்ளை: பெட்டகப் பெட்டிகளை கொள்ளையர்கள் சூறையாடினர்!
யேர்மனி லோயர் சாக்சனியில் உள்ள ஸ்டுர் நகரில் ஒரு வங்கியில் பல பாதுகாப்புப் பெட்டிகளை கொள்ளையர்கள் சூறையாடியதாக காவல்துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர்.
குற்றவாளிகளை இதுவரை அடையாளம் காணவில்லை. சம்பவம் குறித்து நாங்கள் எதுவும் கூறமுடியாது. வங்கி வாடிக்கையாளர்கள் அங்கு என்ன சேமித்து வைத்திருந்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது என்று காவல்துறை அதிகாரி கூறினார்.
வங்கியில் மொத்தம் 728 பாதுகாப்புப் பெட்டிகள் இருந்தன. அவற்றில் 14 உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. ஏனைய பெட்டிகள் அப்படியே உள்ளன என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறித்த கொள்ளை உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணி முதல் 2 மணி வரை நடந்ததாக காவல்துறை கூறியது.
கொள்ளையர்கள் நீல நிற சீருடை அணிந்த மூன்று ஆண்கள் நண்பகலில் வங்கிக்கு முன்னால் ஒரு காரை நோக்கி நடந்து செல்வதைக் காண முடிந்தது என முதலாவது சாட்சி தெரிவித்துள்ளது.
மேற்கு யேர்மனியின் கெல்சென்கிர்ச்சனில் உள்ள ஒரு வங்கியின் பெட்டகத்தைத் துளையிட்டு, கொள்ளையர்கள் சுமார் €30 மில்லியன் பணத்தைத் திருடிச் சென்ற ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது .

Post a Comment