நாணய நிதிய முகாமைத்துவ பணிப்பாளர் இலங்கைக்கு!
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எதிர்வரும் திங்கட்கிழமை (16) இலங்கைக்கு பயணிக்கவுள்ளார்
எதிர்வரும் புதன்கிழமை வரை அவர் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ‘டிட்வா’ புயலால் நாட்டிற்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து அவதானிக்கவுள்ளதுடன்,
இலங்கையை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் குறித்தும் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment