குடும்பமாக உள்ளே!

 




மகிந்தவின் மூத்த சகோதரரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் மகன் சமிந்திர ராஜபக்சவை கைது செய்து முன்னிலைப்படுத்த கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறீPலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 14 ஏர்பஸ் விமானங்களை வாங்கியதில் நடந்ததாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், வழக்கில் சமிந்திர ராஜபக்சவை மூன்றாவது சந்தேகநபராக பெயரிடவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது வெளிநாட்டில் உள்ள சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்காக சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு விசாரணை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே முன்னாள் ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட மிக் விமான கொள்வனவு ஊழல் விசாரணைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


No comments