சுதந்திர தினம் கரி நாளாக அனுஸ்டிப்பு!
இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிக்குமாறு யாழ்; பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைத்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமும் இணைந்து கரி நாள் போராட்டத்தினை அறிவித்துள்ளது.
அதேவேளையில் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் ஆர்ப்பாட்டங்களை போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
ஒரு காலகட்டத்தில் தமக்கான நிலம் வேண்டும் என்று போராடியவர்கள் தான் தமிழ் மக்கள். இன்றைய அரசாங்கம் வடக்கு - கிழக்கு மக்களை இணைத்து ஒன்றாக பயணிப்போம் என்று கூறினாலும் தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை செய்து கொண்டே இருக்கின்றனரென குற்றஞ்சாட்டப்படுகின்றது.
அதேவேளை வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் கோரியுள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைவரது ஆதரவையும் கோரியுள்ளது.

Post a Comment