தண்ணீர் செலவும் உள்ளடக்கம்?
ஆடம்பரங்களை இல்லாதொழிக்கப்போவதாக தெரிவித்து ஆட்சி பீடமேறிய அனுர அரசு யாழில நடாத்திய அனுர வருகை நிகழ்வகளிற்கு சுமார் இரண்டு மில்லியனிற்கு மேல் அரச நிதியை அள்ளிவீசியுள்ளது.
அனுர பங்கெடுத்த முழுநாடு ஒன்றாக நிகழ்வுக்கு மக்களை ஏற்றி இறக்க மட்டும் 23 இலட்சத்து 43 ஆயிரம் அரச நிதி செலவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று தென்மராட்சியின் மீசாலையில் நடைபெற்ற வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு 11 தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தியவகையில் 2 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நிகழ்வில் பங்கெடுக்கவென அழைத்து வரப்பட்டவர்களிற்கென சிற்றுண்டி வழங்க , குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி வழங்க யாழ்.மாவட்ட செயலகம் ஊடாக மில்லியன் கணக்கில் நிதி அள்ளிவீசப்பட்டுள்ளது.
இதனிடையே ஜனாதிபதி அனுர பங்கெடுக்கும் நிகழ்வில் மக்கள் அணிதிரள்வதான காண்பிக்க தென்னிலங்கையில் இருந்து மக்களை வருவிக்கவென பேரூந்துகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment