வெனிசுலாவின் 7வது எண்ணெய்க் கப்பலைப் பறிமுதல் செய்தது அமெரிக்கா
வெனிசுலாவில் செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும், வெனிசுலாவில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களையும் அமெரிக்கா பறிமுதல் செய்து வருகிறது.
இந்நிலையில், வெனிசுலாவுடன் தொடர்புடைய மேலும் ஒரு கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்கா இன்று பறிமுதல் செய்துள்ளது.
கரீபியன் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்க படைகள் பறிமுதல் செய்துள்ளது. இந்த கச்சா எண்ணெய் கப்பல் வெனிசுலாவில் செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் நிறுவனங்களுடன் தொடர்புடையதாகும். மேலும், இந்த கச்சா எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்தது.
இந்த கப்பலை பறிமுதல் செய்ததன் மூலம் அமெரிக்கா பறிமுதல் செய்த வெனிசுலா தொடர்புடைய கச்சா எண்ணெய் கப்பல்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது

Post a Comment