திருகோணமலை வித்தியாலயம் ஒழுங்கை ஒருவழிப் பாதையாக மாற்றம்!


திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாகவுள்ள வித்தியாலயம் ஒழுங்கையானது போக்குவரத்து நெரிசலின் காரணமாக பாடசாலை ஆரம்பிக்கின்ற நேரத்திலும், பாடசாலை விடுகின்ற நேரத்திலும் ஒருவழிப் பாதையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

இது ஏற்கனவே குறித்த நேரங்களில் ஒரு வழிப்பாதையாக பிரகடனப்பட்டிருந்தாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

எனினும் தற்போது அதிகரித்திருக்கின்ற வாகன போக்குவரத்தின் காரணமாக வாகன நெரிசலை குறைக்கும் முகமாக குறித்த வீதியானது காலை 6.30 மணியில் இருந்து 7.30 மணிவரையும், மதியம் 1.00 மணியில் இருந்து 2.00 மணி வரையும் ஒருவழிப்பாதையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எனவே இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


No comments