சிறை தள்ளுவதில் முன்னணி!
ஜனநாயக வழிப்போராட்டங்களில் குதிப்பவர்களை சிறைகளில் தள்ள அனுர அரசு முனைப்பு காண்பித்துவருகின்றது.
அவ்வகையில் யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரை எதிராக போராடியவர்கள் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களிற்கு எதிரான வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (05) எடுத்துக் கொள்ளப்பட்டபோதே வழக்கு ஜனவரி 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. .
தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையான திஸ்ஸ விகாரைக்கு முன்பாக எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தவத்திரு வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக காவல்துறையினர் இன்று புதிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் இருந்த ஐவர் மற்றும் புதிதாகக் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட வலிகாமம் வடக்கு தவிசாளர் சோ. சுகிர்தன் உள்ளிட்ட அனைவரையும் சொந்தப் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் நீதிமன்றக் கட்டளையை மீறினர் என்றும், இன நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவித்தனர் என்றும் கூறி காவல்துறைத் தரப்பு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அமைதியாகப் போராடுவது மக்களின் ஜனநாயக உரிமை. காவல்துறையினரே அங்கு சட்டத்தை மீறி வன்முறையைத் தூண்டியுள்ளனர என பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

Post a Comment