கடிதம் ஏதும் கிடைக்கவில்லை!
தமிழரசுக்கட்சியின் கதிரைகளை முறைகேடாக பின்கதவால் கைப்பற்றியவர்கள் கட்சி சார்பில் தீர்மானங்களை எடுக்கமுடியாதென முன்னாள் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகுவது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து தனக்கு தனிப்பட்ட ரீதியில் உத்தியோகபூர்வ கடிதத்தின் மூலம் அறிவிக்கப்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு பேரவையிலிருந்து சிறீதரன் பதவி விலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக அண்மையில் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
தமிழரசுக்கட்சியின் கொள்கைகளுக்கு மாறாகவும் அரசாங்கத்திற்கு சார்பாகவும் சிறீதரன் செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் பணிப்புரை விடுக்கப்படுவதாகவும் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அரசியலமைப்பு பேரவையிலிருந்து பதவி விலக வேண்டும் என்று தனக்கு உத்தியோகபூர்வ கடிதம் எதுவும் அனுப்பப்படவில்லை என்றும் தமிழரசுக்கட்சி ஊடக அறிவிப்பினை மட்டுமே விடுத்துள்ளதாகவும் கடிதம் கிடைத்தால் மட்டுமே ஆராய முடியுமெனவும் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

Post a Comment