மன்னார் விபத்தில் பெண் பலி!!
நேற்று புதன்கிழமை (28) மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது. மன்னார் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் வந்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பேருந்து ஓட்டுநர் நெரியகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் வவுனியாவைச் சேர்ந்த 48 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment