சட்டவிரோத மதுபானம் அருந்தியவர்களின் உயிரிழப்பு அதிகரிப்பு - இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது


வென்னப்புவ பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ள நிலையில் 8 பேர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை தொடர்ந்து பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஆண் மற்றும் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஆண் மேலதிக விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

இரு பெண்களும் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு இம் மாதம் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

No comments