கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு


அநுராதபுரம் - இராஜாங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில், ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர், இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சடலம் கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதால் , இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இராஜாங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.


No comments