புத்தர் விடயத்தில் சட்டம் இரண்டு?



"கந்தரோடை விகாரை" என நாட்டப்பட்டிருந்த திசை காட்டும் பலகைகளை அகற்றியமைக்கு விசாரணைகளை முன்னெடுத்துள்ள இலங்கை காவல்துறை திஸ்ஸ விகாரை சட்டவிரோத கட்டட பெயர்பலகையினை நாட்ட அனுமதி மறுத்துவருகின்றது.

கந்தரோடை பகுதியில் உள்ள வரலாற்றுச் சின்னங்களை "கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்" என அடையாளப்படுத்த பிரதேச சபை தீர்மானித்திருந்த நிலையில் ஏற்கனவே நாட்டப்பட்ட பெயர்பலகை அகற்றப்பட்டிருந்தது.அவ்வாறு பெயர் பலகை அகற்றப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை காவல்துறை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில் தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில்  வலிகாமம் வடக்கு பிரதேசசபையினால் அனுமதியற்ற கட்டடம் என பெயர் பலகை நாட்ட மேற்கொள்ள முன்னெடுக்கப்பட்ட முயற்சி இலங்கை காவல்துறையால் நிராகரிக்கப்பட்டது.


No comments