விகாரை பாதையில் கோயிலிலிற்கும் சலாம்!



யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொன்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நயினாதீவுக்கு சென்று , நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டுள்ளார்.  

ஜனாதிபதி தன்னிடம் நேரில் வரவில்லை என அண்மையில் நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் ,  ஜனாதிபதி விகாரதிபதியை இன்று வெள்ளிக்கிழமை (16)  சந்தித்து ஆசி பெற்றுள்ளார். 

ஏற்கனவே மைத்திரிபால சிறிசேன முதல் மகிந்த ராஜபக்ச,கோத்தபாய ராஜபக்ச என முன்னாள் ஜனாதிபதிகள்  நயினாதீவுக்கு சென்று , நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொள்வது வழமையாகவே இருந்து வந்துள்ளது.

இதனிடையே நயினாதீவு நாகவிகாரைக்கு பயணித்த அனுரகுமார திசாநாயக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கும்   சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.

நயினாதீவுக்கு இன்று  வெள்ளிக்கிழமை உலங்கு வானூர்தியில் , நாக விகாரைக்கு சென்றிருந்த அனுர அதன்பின்னர் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு சென்று ஜனாதிபதி சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்;.



No comments