சிறீதரனை அரசியலிலிருந்து அகற்றும் உள்வீட்டு சதி உச்சத்தில்!


 சிவஞானம் சிறீதரனை அரசியலிலிருந்து அகற்றும் உள்வீட்டு அரசியலின் ஒரு அங்கமாக அரசியலமைப்பு பேரவையில் இருந்து ராஜினாமா செய்ய பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் அத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமகாலத்தில் சிவஞானம் சிறீதரன் மீது தென்னிலங்கையில் சிலரால் குற்றச்சாட்டுகள் மற்றும் நிரூபிக்கப்படாத வதந்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டே வருகின்றது.

இலங்கை தமிழரசுகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலம் கட்சியிலிருந்து வெளியேற்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வைக்கும் சதிகள் உள்ளிருந்து உச்சமடைந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்திலிருந்து சிவஞானம் சிறீதரன் மட்டுமே வெற்றியடைந்திருந்தார்.

இந்நிலையில் ஏனையோரது தேர்தல் வெற்றி பற்றி அவர் அக்கறை கொள்ளவில்லையென்ற குற்றச்சாட்டு;க்கள் எம்.ஏ.சுமந்திரன் தரப்பினால் முன்வைக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் தொடர்ச்சியாக தென்னிலங்கை அரசியல் சக்திகளது ஆதரவுடன் உள்வீட்டு மேற்பார்வையில் அவர் மீது சேறடிப்புக்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக சிவஞானம் சிறீதரன் ஆதரவு தரப்புக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டேவருகின்றது.

ஏற்கனவே கிளிநொச்சியில் மதுபானச்சாலைகளிற்கான அனுமதிப்பத்திர விவகாரம் மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனம் தொடர்பில் ஆதரவளித்ததான குற்றச்சாட்டுக்களை அத்தகைய தரப்புக்கள் பரப்பியே வருகின்றன.தற்போது இறுதியாக முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதியாக நல்லாட்சி காலத்தில் பணியிலிருந்த தர்சன ஹெட்டியராட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்காமை சர்ச்சையாகியுள்ளது.

எனினும் அவற்றினை நிரூபிக்க பகிரங்க சவாலை சிவஞானம் சிறீதரன் முன்வைத்துவருகின்ற போதும் அத்தரப்புக்கள் மௌனம் காத்தேவருகின்றன.

இந்நிலையில் தற்போது கிளிநொச்சியின் பூநகரி முட்கொம்பன் பகுதியில் இலங்கை அரசினால் அனுமதிக்கப்பட்ட சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கான அனுமதிக்காக சிவஞானம் சிறீதரன் தரகுப்பணம் பெற்றதாக கதைகள் வேகமாக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

வுனவளத்திணைக்களத்தின் கீழுள்ள அரச காணிகளினை சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கு ஒதுக்குவதென்பது மொட்டைத்தலைக்கும் முழங்காலிற்கும் முடிச்சு போடுவதாகவே உள்ளதென்கின்றன உள்வீட்டு தரப்புக்கள்.

சண்பவர் எனும் தனியார் நிறுவனம் இலங்கை புதுப்பிக்க சக்தி அமைச்சின் அனுமதியுடன் முன்னைய ரணில் அரசிடம் சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கான அனுமதியை பெற்றிருந்தது.எனினும் ஆட்சி மாற்றம் மற்றம் மின் அலகொன்றை கொள்வனவு செய்வது தொடர்பிலான பிணக்கினால் சண்பவர் நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேறியிருந்தனர்.

இந்நிலையில் புதிய முதலீட்டாளர்கள் சகிதம் மீண்டும் புதுப்பிக்க தக்க சக்தி அமைச்சின் ஊடாக அரசின் அனுமதியை சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கென பெற்றுள்ளது.

இந்நிலையில் அவற்றின் எந்நடவடிக்கையுடனும் தொடர்புபடாத சிவஞானம் சிறீதரன் மற்றும் அவர் மகன் மீது சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டிருந்தது.அத்தகைய குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுவதன் பின்னணியில் முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரது பெயர்கள் அரசியல் வட்டாரங்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

எனினும் முன்னதாக இக்குற்றச்சாட்டுக்கள் எழுந்த போதே "ஆதாரங்கள் இருந்தால் பகிரங்கமாக அல்லது நீதிமன்றத்தில் நிரூபிக்குமாறு" சிறீதரன் தரப்பு சவால் விடுத்திருந்தது.அதேபோன்று சிறீதரனின் மகனும் சவால் விடுத்திருந்தார். அதேவேளை தற்பேர்து இலஞ்ச ஊழல்களை ஆய்வு செய்வதற்கான குழுவில் முறைப்பாட்டளித்துள்ள சஞ்சய மஹவத்த கடந்த காலங்களில் உயர் காவல்துறை அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைதானவர் என்பதும் தற்போதும் 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரிய வழக்கு ஒன்றை எதிர்கொண்டு வருபவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

அவர்  அத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன் பின்னணியிலும் உள்வீட்டு சதிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அரசியலமைப்பு பேரவையில் இருந்து ராஜினாமா செய்ய பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.



No comments