கணவன் மற்றும் மனைவியின் சடலம் மீட்பு!



வவுனியா, கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் கணவன் மற்றும் மனைவியின் சடலம் மீட்கப்பட்டதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் புதுவருடதினத்தன்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த கணவன் மனைவி ஆகிய இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து இருவரும் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால் நீரில் மூழ்கி இருவரும் சாவடைந்துள்ளனர். சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த  கிருசாந்தன் (வயது 22), நிசாந்தினி (வயது 19) ஆகிய இளம் தம்பதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments