யாழ்ப்பாண கரைவரையில் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் - கடற்படையினர் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதனால் , கடற்தொழிலாளர்கள் கடலுக்கு செல்லாத நிலைமையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி யாழ்ப்பாண கரை வரையில் இந்திய கடற்தொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுள்ளமையை கரையில் நின்று அவதானிக்க கூடியதாக உள்ளது.
குறிப்பாக வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்புக்களில் கரையை அண்மித்த பகுதி வரையில் இந்திய கடற்தொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் கட்டைக்காடு கடற்தொழிலாளர்களால் வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு அறிவித்த போதிலும் கடற்படையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
அதேவேளை சீரற்ற காலநிலையால் கடல் கொந்தளிப்பு அதிகமாக உள்ளதால் , கடற்தொழிலாளர்கள் , கடற்படையினர் உள்ளிட்ட எவரையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment