யாழ். கடற்தொழிலாளர்கள் கடலுக்குள் செல்லவில்லை
நிலவும் சீரற்ற கால நிலையால் கடற்தொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் கடலுக்கு தொழிலுக்கு செல்லாது தமது படகுகளை கரைகளில் அணைத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மற்றும் இன்றைய தினம் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களும் கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை சில மணி நேரம் மாத்திரமே மழை பொழிந்துள்ளது.
அதேநேரம் காலையில் இருந்து தூறலாக மழை பெய்வதுடன் குளிரான கால நிலை நிலவுகின்றது. காற்றும் வீசிய வண்ணமே காணப்படுகிறது.

Post a Comment