யாழில். கடற்கரையில் கஞ்சாவுடன் நடமாடிய இரு இளைஞர்கள் கைது


யாழ்ப்பாணத்தில் சுமார் 28 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரை பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரையும் கைது செய்ததுடன் , அவர்களிடம் இருந்து 28 கிலோ கஞ்சாவையும் மீட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட இருவரையும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments