கிரீஸ் கிரீட் தீவு அருகே படகு கவிழ்ந்ததில் குறைந்தது 17 பேர் உயிரிழப்பு


நேற்று சனிக்கிழமை கிறீஸ் கிரீட் தீவின் தெற்கே மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்ற ஒரு படகு கவிழ்ந்ததில் குறைந்தது 17 பேர் இறந்து கிடந்ததாக கிரேக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

மோசமான நிலையில் உயிர் பிழைத்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் ஏஎவ்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

கடுமையான புயலின் போது கப்பலின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், அதில் இருந்தவர்கள் தண்ணீர், உணவு அல்லது சரியான தங்குமிடம் இல்லாமல் திறந்த கடலில் சிக்கித் தவித்ததாகவும் உயிர் பிழைத்தவர்கள் மீட்புப் பணியாளர்களிடம் தெரிவித்தனர்.

உள்ளூர் அறிக்கைகளின்படி, படகு கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் புலம்பெயர்ந்தோர் இறந்து ஒரு நாளுக்கு மேல் ஆகிவிட்டதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

No comments