கிளிநொச்சியில் இந்திய இராணுவத்தினர்
வெள்ளத்தால் சிதைந்த முக்கிய சாலைகளை ஆய்வு செய்யும் பணிகள் இந்திய இராணுவத்தின் பொறியியல் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேதமடைந்த பாலங்கள் இணைப்பு துண்டிக்கப்பட்ட சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் நீர்மட்ட உயர்வை நேரடியாக மதிப்பீடு செய்து பெய்லி பாலங்களை விரைவாக நிறுவும் திட்டத்தை வடிவமைத்து வருகின்றனர்.
அடுத்த சில நாட்களில் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பல முக்கிய சாலைப் பாதைகள் மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர் வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு வீதியின் பதினொராவது கிலோமீற்றரில் உள்ள பாலத்தினை புனரமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளனர்.
கிளிநொச்சிக்கு வருகை தந்த இந்திய இராணுவ பொறியியல் குழு புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துள்ளன.

Post a Comment