சீனா,இந்தியா ,பாகிஸ்தான் வரிசையில்!
டித்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக ஒரு இலட்சம் அமெரிக்க டொலரை சீனா வழங்கியுள்ளது.
இந்த நிதியை சீன செஞ்சிலுவை சங்கம், இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு அவசர நிவாரண உதவியாக வழங்கியுள்ளது.
இதனிடையே ஒற்றுமையின் அடையாளமாக, இந்தியா ஒபரேசன் சாகர் பந்துவின் கீழ் சூஇந்திய கடற்படைக் கப்பலான ஐ.என்.எஸ். சுகன்யா நிவாரணப் பொருட்களுடன் இன்று (01) திருகோணமலையை வந்தடைந்துள்ளது.
அதேவேளை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க பாகிஸ்தான் கடற்படை உலங்குவானூர்தி இலங்கை விமான படையினரின் வழிகாட்டலில் செயற்பட்டுவருகின்றது.
பாகிஸ்தானிய விமானப்படை வெள்ளத்தில் சிக்கிய நால்வரை பாதுகாப்பாக மீட்டெடுத்ததோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களும் உலங்குவானூர்தி மூலமே விநியோகித்துவருகின்றது.

Post a Comment