மரணம் 366 –அமைச்சரோ கொண்டாட்டம்!

 



டித்வா புயல் தாக்கத்தினால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

அந்த வகையில் இன்று மாலை 5 மணி வரையான காலப்பகுதி வரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

அத்துடன் 367 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது

இதனிடையே யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும்  வழியில் பஸ் வண்டியில் சிக்கி பின்னர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட தனியார் வங்கி முகாமையாளர் பத்மநிகேதன் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்த பத்மநிகேதன் என்பவரின் உடலே இன்று (01) மீட்கப்பட்டுள்ளது.

இதனிடையே அமைச்சர் சந்திரசேகரன் கிளிநொச்சி அரச அதிபர் சகிதம் நிவாரண உணவில் கைவைத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.


No comments