அரைஅவியலலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாநன் இளங்குமரன் அரச கிராம சேவையாளரை கடமை நேரத்தில் தாக்கிய விவகாரம் சூடுபிடித்துள்ளது.
தூக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாணத்தில் இன்றைய தினம் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தின் ஒரு அங்கமாக கிளிநொச்சியில் கிராம அலுவலர்கள் ஒரு வாரத்திற்கு கறுப்பு பட்டி அணிந்து பணிக்குச் செல்ல தொடங்கியுள்ளனர்.
உமையாள்புரம் கிராம உத்தியோகத்தர் தியாகராசா கலைரூபன் அவர்கள் கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி பரந்தன் இந்து மகாவித்தியாலய நலன்புரி நிலையத்தில்; கருணநாநன் இளங்குமரனால் தாக்கப்பட்டிருந்தார்.
இச்சம்;பவத்திற்கு தங்களது எதிர்ப்பினை தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட கிராம அலுவலர்கள் ஒரு வாரத்திற்கு கறுப்பு பட்டி அணிந்து தங்களது கடமைகளை மேற்கொள்ள தீரமானித்துள்ளனர்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை மற்றும் பொதுமக்களுக்கான மனித நேய பணிகளை வழங்க வேண்டியதன் அவசியம் காரணமாக நாளை தொடக்கம் ஒருவாரத்திற்கு கறுப்பு பட்டி அணிந்து பணிக்கு செல்வதாகவும் நியாயமான சட்டரீதியான தீர்வுகள் கிடைக்காதவிடத்து மேலதிக செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்;டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணத்திலும் கிராம அலுவலர்கள் இன்று எதிர்ப்புத் தெரிவித்து கறுப்பு பட்டி அணிந்து கடமைகளுக்குச் சென்றிருந்தனர்.


Post a Comment