யாழிலிலுள்ள இந்திய தூதரக்தை விரட்டுவோம்?
யாழில் உள்ள இந்திய தூதரகத்தை ஜந்தாயிரம் பேரை திரட்டி இல்லாமல் செய்வோம். சீனா அல்லது அமெரிக்காவிற்கும் இடம் கொடுத்து யாழில் தூதரகத்தை அமைக்க விடுவோமென தேசிய மக்கள் சக்தியின் உள்ளுர் தலைவர் ஒருவர் தெரிவித்த கருத்து சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டி வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதானால் மீனவர்களின் வாழ்வாதாரமும் கடல் வளமும் பாதிக்கப்படுவதாக
போராட்டத்தில் கலந்து கொண்ட ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே தேசிய மக்கள் சக்தி உள்ளுர் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக அரசியல் வாதிகள் மீனவர்களின் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று மீனவர்களை கோரி உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகளை வெளியேற்றப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி கரையோர கடற்றொழிலாளர்களின் தொடர்பாடல் அமைப்பாளர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் பிரகாஸ் ஆகியோர் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்திருந்தமையே சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

Post a Comment