நேற்று கைது:இன்று பிணை:தேசிய மக்கள் சக்தி!
சப்புகஸ்கந்தையில் நேற்று இரவு நடந்த விபத்து தொடர்பாக முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டிருந்தார்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் விபத்தைத் தவிர்க்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது.எனினும் அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என அறிவிக்கப்பட்டுமிருந்தது.
இதனிடையே கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு அவர் செலுத்திய ஜீப் வண்டி, காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும், இன்றைய தினம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே மோசடியான முறையில் கல்வித்தகமைகளை வெளியிட்ட குற்றச்சாட்டுக்களில் தனது சபாநாயகர் பதவியை துறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. .

Post a Comment