அருச்சுனாவிற்கு தையிட்டியால் பிரச்சினையாம்?
தையிட்டி விகாரை விடயத்தில் தனது மூக்கை நுழைத்துக்கொண்டுள்ள சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வடக்கில் உள்ள ஒரு விகாரையை ஜனவரி 3 ஆம் திகதி தாக்கி வகுப்புவாத கலவரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நயினாதீவு நாக விகாரையின் பிரதமர குரு தையிட்டி விகாரை தமிழ் மக்களது காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையென பகிரங்கமாக கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் காணி பறிப்பினால் பாதிக்கப்பட்ட தையிட்டி மக்கள் நாக விகாரை விகாராதிபதிளை நேரில் சந்தித்து தமக்கு ஆதரவளிக்க கோரியுள்ளனர்.
இந்நிலையிலே விகாரையைத் தாக்கி வகுப்புவாத வன்முறையைத் தூண்டுவதற்கு முயற்சிக்கப்படுவதாக அருச்சுனா தெரிவித்துள்ளார்.
வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமிழர்களின் மனதை மூளைச்சலவை செய்து பிரிவினைவாதத்தை ஊக்குவிக்க முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரைக்கெதிராக குரல் எழுப்பிவரும் தரப்புக்களிற்கு சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

Post a Comment