பிரிட்டன் தடை:சுரேன் பாதுகாப்பு!
இலங்கை இராணுவத்தளபதிகளில் ஒருவரான கமல் குணரட்னாவுடன் சேர்த்து டக்ளஸ் தேவானந்தாவுக்கும் பிரிட்டன் அரசு தடை அறிவிக்கலாமென்ற எதிர்ப்பார்ப்பின் மத்தியில் உயிர்பாதுகாப்பு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா எதிரிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் பல தடவைகள் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்ட ஒருவராவார், அவருக்கான பாதுகாப்பை சிறைச்சாலைக்குள் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என சிறீலங்கா சுதந்திர கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகரும், அரசியல் குழு உறுப்பினருமான சுரேன் ராகவன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்பொழுது மகர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு ஆயிரம் கைதிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டிய போதும் மூவாயிரத்துக்கும் அதிகமான கைதிகள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.அகையால் அந்த சிறைச்சாலையில் அவருக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்வதாக சுரேன் இராகவன் தெரிவித்துள்ளார்;.
2000ம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் வழங்கப்பட்ட ஆயுதங்களே தற்போது டக்ளஸிடமிருந்து பாதாள உலக கும்பல் வசம் சென்றுள்ளது.அதன் எதிரொலியாகவே டக்ளஸின பாதுகாப்பு தொடர்பில் சுதந்திரக்கட்சி குரல் எழுப்பியுள்ளது.
இந்நிலையில் விசாரணைகளிற்கு டக்ளஸ் ஒத்துழைக்காமையால் தடுப்பு காவல் ஜனவரி 9ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Post a Comment