மலையக உறவுகளிற்கு சுமாவும் அழைப்பு!
வடக்கு, கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரனும் அழைப்புவிடுத்துள்ளார்.
கடந்த வாரம் கண்டி, கம்பளைக்கு சென்ற போது மலையகத்தில் இருந்து வடக்கு கிழக்கிற்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை அழைப்பதற்குத் தயாராகவே வந்தோம். ஆனால் மலையக உறவுகளும் அதற்கான விருப்பத்தைத் தெரிவிக்கும் வரை பகிரங்கமாக அதைச் சொல்வதைத் தவிர்த்திருந்தோம்.
இப்போது அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, மக்களும் அதை விரும்புவதாகச் சொல்கிறார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மிகுந்த பாசத்தோடு மனதார உங்களை வரவேற்கிறோம். ஏற்கனவே எம்மில் பலர் தங்கள் சொந்த நிலங்களைக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளார்கள்.
அதே போல் அரச காணிகளையும் வாழ்விடங்களுக்கும் பயிர்ச் செய்கை, தோட்டம் போன்றவற்றிற்கும் பெற்றுத் தர எம்மால் முடிந்த முயற்சிகளை செய்து கொடுப்போம்.” எனவும் எம்.ஏ.சுமந்திரன் கருத்து பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ஆறு.திருமுருகன் உள்ளிட்ட வடக்கிலிருந்து பலரும் மலையக உறவுகளை நோக்கி அழைப்புக்களை விடுத்தே வருகின்றனர்.
இதனிடையே அரசு பாதுகாப்பான காணி தர மறுத்தால் வடக்கு, கிழக்கில் குடியேற மலையக மக்கள் விருப்பம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்

Post a Comment