இந்திய படகுகளிற்கு மீண்டும் எதிர்ப்பு!



இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத இழுவைமடி மீன்பிடி நடவடிக்கைகளால் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பாதிப்புக்களிற்கு தீர்வு வேண்டி போராட உள்ளுர் மீனவர்கள் முற்பட்டுள்ளனர்.

அப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடுவது தொடர்பாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்குரிய மனுவொன்றை உள்ளுர் மீனவ அமைப்புக்கள் வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளித்துள்ளன.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை ஆளுநர் செயலகத்தில் நேற்று; புதன்கிழமை சந்தித்து;கோரிக்கைக் கடிதத்தைக் கையளித்திருந்தனர்.

பல்வேறு இடர்பாடுகளின் போதும் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வருகின்ற உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள அதேவேளை, இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத இழுவைமடி மீன்பிடி முறையால் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல்வளம் என்பன் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன .அவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தமக்குச் சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறும் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தினர்; கோரிக்கை விடுத்துள்ளதாக யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.


No comments