பாகிஸ்தானிற்கு இந்தியா தடை?
புயலால் பாதிப்புற்ற இலங்கைக்கு மனிதாபிமான உதவியை வழங்குவதில் சர்வதேச நாடுகள் பலவும் முனைப்பு காண்பித்துவருகின்றன.
இந்நிலையில் மறுபுறம் சர்வதேச அரசியல் முறுகல் நிலையும் இலங்கை வான் பரப்பினை முன்வைத்து மூண்டுள்ளது.
இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் விமானத்திற்கு இந்திய வான்வெளியில் பறப்பதற்கான அனுமதியை புதுடெல்லி தாமதப்படுத்தியதாக பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டை இந்தியா மறுதலித்துள்ளது. அத்தகைய குற்றச்சாட்டு “அபத்தமானது” மற்றும் “தவறான தகவல்” எனக் கூறி இந்தியா நிராகரித்துள்ளது.
விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விமான அனுமதி கோரிக்கை டிசம்பர் முதலாம்; திகதி இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு கிடைத்தது. இந்திய அரசாங்கம் இந்தக் கோரிக்கையை “விரைவாக” பரிசீலித்து பாகிஸ்தான் சமர்ப்பித்த பயணத் திட்டத்தின்படி அதே நாளில் மாலை அனுமதியை வழங்கியதாகவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment