தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தனியாருடையது - அதனை மீள வழங்குங்கள் ; நாக விகாரை விகாராதிபதி கோரிக்கை
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி பொது மக்களுடையது. அதனை அந்த மக்களுக்கே வழங்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு அதனை நான் அரசாங்கத்திற்கும் கூறியுள்ளேன் என யாழ். நாக விகாரையின் விகாராதிபதி விமலதர்ம தேரர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி , பொது மக்களின் காணி என நீதி அமைச்சர் , ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க தரப்புக்களுக்கு நான் தெளிவு படுத்தியுள்ளேன்.
இந்த பிரச்சனையை அரசியலாக்கி முரண்பாடுகளை வளர்க்க வேண்டாம் என தமிழ் , சிங்கள மக்களிடம் கோருகிறேன். காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும்.
அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை என தெரிவித்தார்.

Post a Comment