நபரொருவரை படுகொலை செய்ய தயாராகவிருந்த கருணா குழுவை சேர்ந்தவர் துப்பாக்கியுடன் கைது


நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்வதற்கு தயாராக இருந்த கருணா குழுவை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் வகை கைத்துப்பாக்கியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

வாழைச்சேனை பகுதியை சேர்ந்த 36 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார். 

கருணா குழுவை சேர்ந்த குறித்த நபர் . கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி சுமார் 11 வருடங்கள் காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்துள்ளார்.

அக்கால பகுதியில் பாதாள உலக குழுவொன்றின் உறுப்பினரான கரந்தெனிய சுத்தா என்பவருடன் ஏற்பட்ட நட்பு காரணமாக அவரது வழி நடத்தலில் நபர் ஒருவரை சுட்டு படுகொலை செய்வதற்கு தயாராக இருந்த நிலையிலையே கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


No comments