வெள்ளை மாளிகைக்கு அருகே இரண்டு தேசிய காவல்படையினர் சுட்டுக்கொலை!


நேற்று புதன்கிழமை வாஷிங்டன் டிசியில் உள்ள வெள்ளை மாளிகை அருகே இரண்டு தேசிய காவல்படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:15 மணியளவில் (1915 GMT) துப்பாக்கிச் சூடு நடந்ததாக எவ்பிஜ இயக்குநர் காஸ் பட்டேல் கூறினார்.

வெள்ளை மாளிகையிலிருந்து அருகே அமைந்த  ஃபராகுட் மெட்ரோ நிலையம் அருகே இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது.

சந்தேக நபரை மத்திய நிறுவனங்கள் இன்னும் பகிரங்கமாக அடையாளம் காணவில்லை.

சந்தேக நபரின் பெயர் ரஹ்மானுல்லா எல் என்றும், வாஷிங்டன் மாநிலத்தில் வசித்து வந்த 29 வயதான ஆப்கானிஸ்தான் நாட்டவர் என்றும் செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, போரின் போது அமெரிக்காவிற்கு உதவிய பாதிக்கப்படக்கூடிய ஆப்கானியர்களுக்கு உதவுவதற்காக ஒரு சிறப்பு விசா திட்டத்தின் கீழ் அவர் 2021 இல் அமெரிக்காவிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

சந்தேக நபர் தனது விசா காலாவதியானதைத் தொடர்ந்து அமெரிக்காவில் தங்கியிருந்ததாகவும், தாக்குதல் நடந்த நேரத்தில் அவர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருந்ததாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத நீதித்துறை அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலை பயங்கரவாதச் செயலாகக் கருதி, மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI) விசாரித்து வருவதாக NBC செய்தி வெளியிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு பதிலடியாக அமெரிக்க தலைநகருக்கு கூடுதலாக 500 துருப்புக்களை அனுப்பப்போவதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

No comments